மேக்னம் ஆதிரா கால்நடை உற்பத்தியாளர் கம்பெனி சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனத்தில் 659 பெண் விவசாயி,1 ஆண் விவாசாயி -660 மொத்தம் விவசாயிகள் ஒருங்கிணைத்து செயல்பட்டுவருகிறது, இதில் 40% மலைவாழ்மக்கள்,30% தாழ்த்தப்பட்ட மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இயற்கை விவசாயம் மற்றும் மதிப்பு கூட்டுப் பொருட்களை தயாரிப்பதை முக்கியமாக நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளாக சாணத்தில் இருந்து தயாரிக்க கூடிய மதிப்பு கூட்டு பொருட்கள் இயற்கையாக மக்கக்கூடிய ஆர்கானிக் கப் மற்றும் தேங்காய் மற்றும் அதன் மதிப்பு கூட்டல் பொருட்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான கால்நடை தீபங்களை முக்கியமான பணிகளாக செய்து வருகிறது
இது மட்டுமின்றி பெண் விவசாயிகளை நிலைத்த நீடித்த விவசாயத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் ஆதிரா கால்நடை கம்பெனி நடத்தி வருகிறது மேலும் இந்த கம்பெனி இந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வியாபாரத்தை செய்துள்ளது , ஒவ்வொரு பங்குதராரக்கும் வருமானம் கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் பல்வேறு வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. பெண்கள் தலைமையில் நடக்கக்கூடிய ஒரு நிறுவனம் பல்வேறு சாதனைகளை செய்து செய்து வருகிறது என்பது எந்த வகையான மாற்று கருத்தும் இல்லை
If you would like to support our mission and contribute towards our activities, you can make a donation using the bank account details provided below. Your generous support helps us continue our work and serve the community better.